Tuesday, 19 June 2012

கெழுத்தி மீன் குழம்பு


கெழுத்தி மீன் குழம்பு



தேவையான பொருட்கள்:
கெழுத்தி மீன் - 1 கிலோ
நல்லெண்ணெய் -1 குழி கரண்டி
சோம்பு - 1 tbl.spoon
மிளகு - 1/2 tbl.spoon
சீரகம் - 1 tbl.spoon
வெந்தயம் - 1/2 tbl.spoon
மிளகாய் தூள் - 11/2 tbl.spoon
தனியா தூள் - 2 tbl.spoon
பூண்டு -10 பல்
வெங்காயம் - 1
தக்காளி -2
புளி - எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி இழை - சிறிதளவு
தேங்காய் விழுது - 11/tbl.spoon


தாளிக்க:
வெந்தயம் - 1 t.spoon
சீரகம் - 1 t.spoon
கறிவேப்பிலை - 1 கொத்து


செய்முறை:
மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் வெந்தயம்,சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும், பிறகுவெங்காயம், பூண்டு போட்டு நன்கு வதக்கவும், அதனுடன்தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
பின்னர் மிளகு, சீரகம்,சோம்பு, வெந்தயம், மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை ஊற்றி தேவையான அளவு புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் பின்னர் தேங்காய்விழுதுசேர்த்து ஒரு கொதி வந்த பிறகு மீனை சேர்த்து ஐந்து நிமிடம் வரை கொதிக்க விட்டு கடைசியாக மல்லி இழையை  தூவவும். சுவையான கெழுத்தி மீன் குழம்பு தயார்.

குறிப்பு;
தேங்காய் விழுது விருப்பமில்லையெனில் சேர்க்க தேவை இல்லை.
மண் சட்டியில் குழம்பு வைத்தால் சுவை கூடும்.ஆரோக்யமும் அதிகம்,அதற்காக அனைவரும் மண் சட்டியை உபயோகிக்க முடியாது.
அனைத்து வகையான மீன்களிலும் இதே முறையில் குழம்பு செய்யலாம்.

No comments:

Post a Comment