Monday 26 March 2012

பேபி கார்ன் சப்ஜி



தேவையான பொருட்கள்:


பேபி கார்ன் - 1கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
மல்லி தூள் - 1 tbl.spoon
கசகசா - 11/2 t.spoon
காய்ந்த மிளகாய் - 6
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 பல்
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 4
சீரகம் - 1t.spoon
குடை மிளகாய் - 3/4 கப்
கசூரி மேத்தி - 1/2 t.spoon
பிரவுன் சுகர் - சிறிது
எண்ணெய் - 2 tbl.spoon
மல்லி இழை - சிறிது

செய்முறை:
முதலில் வெங்காயம்,காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, மல்லி தூள், பட்டை மற்றும் லவங்கம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும். தக்காளியை தனியாக அரைத்து கொள்ளவும். வாணலியில்
எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு, சிறிதளவு சர்க்கரை சேர்த்து அரைத்த மசாலா விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும், பிறகு பேபி கார்ன், குடைமிளகாய் சேர்த்து வேக வைக்கவும் அடுத்து தக்காளி விழுதை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.கடைசியாக கசூரி மேத்தி மற்றும் மல்லி இழை சேர்க்கவும்.
இந்த பேபிகார்ன் சப்ஜி சப்பாத்தி,நான்,புல்கா ரொட்டிக்கு ஏற்ற சுவையான சைட்டிஷ்.


Friday 9 March 2012

வாழைக்காய் வறுவல்

வாழைக்காய் வறுவல்



தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 3
இஞ்சி,பூண்டு விழுது - 1 tbl.spoon
கடுகு - 1/2 t.spoon
சீரகம் - 1/4 t.spoon
சோம்பு - 1/4 t.spoon
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய் தூள் - 1 t.spoon
மல்லி தூள் - 1 t.spoon
மஞ்சள் தூள் - 1/4 t.spoon
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - 1-1/2 tbl.spoon

செய்முறை:
முதலில் வாழைக்காயை வேக வைத்துக்கொள்ளவும், பிறகு வாழைக்காயை தோலுரித்து வட்டமாக அறுத்து அதில் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,மல்லி தூள் மற்றும் உப்பு போட்டு பிசறி வைத்துக்கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு,சீரகம்,சோம்பு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் வாழைக்காயை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வறுத்தெடுக்கவும்.

Tuesday 6 March 2012

ஆப்பம் - தேங்காய் பால்

ஆப்பம் - தேங்காய் பால் 



தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்
பச்சரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப்
வெந்தயம் - 1 tbl.spoon
ஜவ்வரிசி - 1 கைப்பிடி
தேங்காய் - 1
சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - சிறிதளவு


செய்முறை:
புழுங்கல் அரிசி , பச்சரிசி , உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.ஜவ்வரிசியை தனியாக ஊற வைத்து கொள்ளவும் .

பிறகு அனைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்து 7-8 மணி நேரம் மாவை புளிக்க வைத்து பிறகு ஆப்ப சட்டியில் ஆப்பம் வார்க்கவும் .

தேங்காயை நன்கு துருவி மிக்சியில் போட்டு தேவையான அளவு வெந்நீர் ஊற்றி அரைத்து பால் பிழிந்து சர்க்கரை , ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

Monday 5 March 2012

சாம்பார் இட்லி



சாம்பார் இட்லி
















தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
மசூர் பருப்பு - 1/2 கப்
பரங்கிக்காய் - சிறிய துண்டு
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 t.spoon
பெருங்காயம் - 1/4 t.spoon
புளி - சிறிய உருண்டை
கறிவேப்பிலை -சிறிதளவு
மல்லித்தழை - சிறிதளவு
நெய் - 2 t.spoon

வறுத்து பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 1 t.spoon
கடலை பருப்பு - 1 t.spoon
சீரகம் - 1/2 t.spoon
வெந்தயம் - 1/2 t.spoon
தேங்காய் - 1 t.spoon
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 3 t.spoon

தாளிக்க:
கடுகு - 1/2 t.spoon
உளுத்தம் பருப்பு - 1 t.spoon
எண்ணெய் - 1 tbl.spoon

செய்முறை:
பருப்பு,மஞ்சள் தூள் மற்றும் பரங்கிக்காய் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து அதனுடன் வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு புளி தண்ணீரை ஊற்றி கறிவேப்பிலை,பெருங்காயம் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு , வேக வைத்த பருப்பு , அரைத்த பொடி , தேவையான அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடவும்.
இட்லி மாவை கொண்டு  சிறு ,சிறு இட்லிகளாக ஊற்றிக் கொள்ளவும்.
பரிமாறும் கிண்ணங்களில் இட்லிகளை போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றி , மல்லித்தழை தூவி , நெய்விட்டுப் பரிமாறுங்கள்.


Saturday 3 March 2012

கத்தரிக்காய் கார குழம்பு

கத்தரிக்காய் கார குழம்பு


தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 6
மஞ்சள் தூள் - 1/2 t.spoon
உப்பு - தேவையான அளவு
வெந்தயம் - 1 t.spoon
சீரகம் - 1 t.spoon
நல்லெண்ணெய் - 2 tbl.spoon
கறிவேப்பிலை - சிறிதளவு
புளி - எலுமிச்சை அளவு

அரைக்க வேண்டிய பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 15 பல்
தேங்காய் துருவியது - 1/2 கப்
பொட்டு கடலை - 1 tbl.spoon
மிளகாய் தூள் -1 tbl.spoon
மல்லி தூள் -2 tbl.spoon


செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம்,வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். முழு கத்தரிக்காயை நடுவில் நான்காக வெட்டி
அதனை எண்ணெய்யில் நன்றாக வதக்கி கொள்ளவும், அரைத்த விழுதை வாணலியில் ஊற்றி சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். கடைசியாக புளி கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு ஐந்து நிமிடம் கொதித்த பிறகு இறக்கி விடவும்.




Thursday 1 March 2012

முருங்கைக்காய் மசாலா குழம்பு

முருங்கைக்காய் மசாலா குழம்பு


தேவையான பொருட்கள் :
முருங்கைக்காய் - 3
உருளைக்கிழங்கு - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/2 tspoon
மிளகாய் தூள் - 1 tbl.spoon
உப்பு - தேவைகேற்ப


அரைக்க வேண்டிய பொருட்கள் :
தேங்காய் துருவல் - 1/4 கப்
பொட்டு கடலை  -  1 tbl.spoon
பட்டை - 2
கிராம்பு  - 2
சோம்பு  -1 tspoon
கசகசா - 1 tspoon


தாளிக்க தேவையான பொருட்கள்  :
எண்ணெய் - 2 tbl.spoon
கறிவேப்பிலை - சிறிதளவு
கடுகு - 1 tspoon


செய்முறை :
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலையை தாளித்து கொள்ளவும்,பிறகு அரிந்து வைத்துள்ள  வெங்காயத்தை போட்டு வதக்கவும் , அடுத்து தக்காளியை போட்டு நன்கு வதக்கிய பிறகு காய்கறிகளை சேர்த்து வதக்கவும். அதன் பின்னர் மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்தவுடன்,அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை குழம்பை கொதிக்க வைத்து இறக்கி விடவும்...

சுவையான முருங்கைக்காய் மசாலா குழம்பு தயார்...

ரசமலாய்

ரசமலாய்



தேவையான பொருட்கள்  :

பால் - 1 ltr ( பனீர் தயாரிக்க)
சர்க்கரை  - 1கப்
தண்ணீர் - 2 1/2 கப்
எலுமிச்சை சாறு அல்லது - 2 tbl.spoon
வெள்ளை வினிகர்
ஏலக்காய் பவுடர்  - 2 tbl.spoon
பால் - 3 கப்
சர்க்கரை  - 2 1/2 tbl.spoon
குங்கும பூ  - சிறிதளவு
பாதாம் - 3 tbl.spoon
பிஸ்தா - 2 tbl.spoon

செய்முறை :

ஒரு அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் சுண்ட காய்ச்ச வேண்டும்.பிறகு எலுமிச்சை சாறை பாலில் ஊற்ற வேண்டும்,உடனே பால் திரிய ஆரம்பிக்கும்போது அடுப்பிலிருந்து பாலை இறக்கி விடவும்.அடுத்து ஒரு மெல்லிய துணியில் திரிந்த பாலை வடிகட்ட வேண்டும்.நீர் இறங்கி பால் திரட்சிகள் துணியில் தங்கிவிடும்.அதை அப்படியே இறுக்கமாக கட்டி அதன் மேல் ஒரு கனமான பொருளை வைத்தால் மீதி நீரும் வெளியேறி விடும் .இதுவே பனீர்.பணீரை 1tspoon மைதா சேர்த்து நன்கு பிசைந்து கோலி வடிவத்தில் சிறிதாக உருட்டி கொள்ளவும்.பிரஷர் குக்கரில் சர்க்கரை, நீர் சேர்த்து பாகு வைத்து கொதிக்கும் நிலையில் பனீர் உருண்டைகளை போட்டு குக்கரை மூடி 3 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.சுவையான ரசகுல்லா  தயார்.

ரசமலாய் தயாரிக்க 3 கப் பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து  சர்க்கரை ,குங்கும பூ மற்றும் ஏலக்காய் போட்டு பால் பாதியாக குறையும் வரை சுண்ட  காய்ச்ச வேண்டும்,பிறகு ரசகுல்லாவை  பாகிலிருந்து எடுத்து சிறிதளவு தட்டையாக உள்ளங்கையில் வைத்து அழுத்தி காய்ச்சிய பாலில் போட்டு அதன் மேல் பாதம்,பிஸ்தா இரண்டையும் மெல்லியதாக சீவி போடவேண்டும். ரசமலாய் தயார்.