Monday, 27 February 2012

வாழைப்பூ பொரியல்

வாழைப்பூ பொரியல்



தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
பச்சை மிளகாய்  4
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள்  - 1/2 tspoon
உப்பு -தேவைகேற்ப
கடுகு - 1/2 tspoon
கடலை பருப்பு -1tspoon
எண்ணெய் - 2 tbl.spoon
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் துருவியது சிறிதளவு

செய்முறை:
வாழைப்பூவை நன்று சுத்தம் செய்து பொடி பொடியாக அரிந்து வேகவைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைபருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டுதாளித்த பின்பு  வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிய பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்க்கவும். பிறகு வேக வைத்த வாழை பூவை போட்டு நன்கு கிளறி இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.




Sunday, 26 February 2012

பாகற்காய் வறுவல்

பாகற்காய் வறுவல்



தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 3
மிளகாய் தூள் - 2 tbl.spoon
மஞ்சள் தூள் - 1/2 tspoon
உப்பு      - தேவைகேற்ப
அரிசிமாவு - 1 tbl.spoon
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
பாகற்காயை மெல்லிய துண்டாக வெட்டி அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் அரிசி மாவை சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி பின்பு பொரித்து எடுக்கவும்
சாம்பார் சாதம், தயிர்சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் இது மிக்க சுவையாக இருக்கும்.





புடலங்காய் கூட்டு

புடலங்காய் கூட்டு 





தேவையான பொருட்கள்:
புடலங்காய் - ஒன்று (சற்று பெரியது)
பாசி பருப்பு - 1/2 Cup
சிறிய வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
பெருங்காயம் - 1/4 tspoon
மிளகாய் தூள் - 1 tbl.Spoon
மஞ்சள் தூள் - 1 tspoon
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - 2 tbl. Spoon
கடுகு - 1 tspoon
உளுத்தம்பருப்பு - 1 tspoon
கடலைபருப்பு - 1 tspoon
பூண்டு - 4 பல்

செய்முறை:
பருப்பை மலர வேக வைத்து கொள்ளவும். புடலங்காய், வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பூண்டு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விட்டு, வேகவைத்த பொருட்களையும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிவிடவும்.
சாதம் மற்றும் இட்லி, தோசைக்கும் நன்றாக இருக்கும்.

வெண்டைக்காய் புளி குழம்பு

வெண்டைக்காய் புளி குழம்பு 



தேவையான பொருட்கள்:
  • வெண்டைக்காய் - 200 gm
  • வெங்காயம் - ஒன்று
  • தக்காளி - ஒன்று
  • கறிவேப்பிலை - ஒரு கொத்து
  • மிளகாய்த்தூள் - 1 tbl. spoon
  • தனியாதூள் - 2 tbl. spoon
  • மஞ்சள்தூள் - 1/2 tspoon
  • புளி - எலுமிச்சை அளவு
  • உப்பு - தேவைகேற்ப
  • தேங்காய் விழுது - அரை கப்
  • சீரகம் - 1 tspoon
  • வெந்தயம் - 1 tspoon
  • நல்லெண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் ,சீரகம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும் அடுத்து தக்காளியை போட்டு நன்கு வதக்கிய பிறகு வெண்டைக்காயை போட்டு வதக்கவும், பிறகு மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,தனியாதூள் போட்டு புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும், ஒரு கொதி வந்த பின்னர் அரைத்த தேங்காய் விழுதை போட்டு சுவைக்கேற்ப உப்பு போட்டு நன்கு ஏழு நிமிடம் கழித்து  இறக்கிவிடவும்.

சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு தயார்..

Saturday, 25 February 2012

My Crafts and Paintings


Vinayakar Mural Art




Madhubani Painting (Indian Folk Art)




Clay Art 



Glass Painting with 3D Liner



Vastu Mirror



Glass Painting



Stain Glass Painting



Stain Glass Painting



Water Color Pencil Shading



Oil Painting




Coffee Painting




Copper & Gold Painting