Monday, 27 February 2012

வாழைப்பூ பொரியல்

வாழைப்பூ பொரியல்



தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
பச்சை மிளகாய்  4
பெரிய வெங்காயம் - 1
மஞ்சள் தூள்  - 1/2 tspoon
உப்பு -தேவைகேற்ப
கடுகு - 1/2 tspoon
கடலை பருப்பு -1tspoon
எண்ணெய் - 2 tbl.spoon
கறிவேப்பிலை - 1 கொத்து
தேங்காய் துருவியது சிறிதளவு

செய்முறை:
வாழைப்பூவை நன்று சுத்தம் செய்து பொடி பொடியாக அரிந்து வேகவைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைபருப்பு மற்றும் கறிவேப்பிலை போட்டுதாளித்த பின்பு  வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிய பிறகு பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்க்கவும். பிறகு வேக வைத்த வாழை பூவை போட்டு நன்கு கிளறி இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.




No comments:

Post a Comment