Sunday, 26 February 2012

புடலங்காய் கூட்டு

புடலங்காய் கூட்டு 





தேவையான பொருட்கள்:
புடலங்காய் - ஒன்று (சற்று பெரியது)
பாசி பருப்பு - 1/2 Cup
சிறிய வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
பெருங்காயம் - 1/4 tspoon
மிளகாய் தூள் - 1 tbl.Spoon
மஞ்சள் தூள் - 1 tspoon
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - 2 tbl. Spoon
கடுகு - 1 tspoon
உளுத்தம்பருப்பு - 1 tspoon
கடலைபருப்பு - 1 tspoon
பூண்டு - 4 பல்

செய்முறை:
பருப்பை மலர வேக வைத்து கொள்ளவும். புடலங்காய், வெங்காயம், தக்காளி, பெருங்காயம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பூண்டு மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விட்டு, வேகவைத்த பொருட்களையும் தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கிவிடவும்.
சாதம் மற்றும் இட்லி, தோசைக்கும் நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment