தேவையான பொருட்கள்:
பேபி கார்ன் - 1கப்
வெங்காயம் - 2
தக்காளி - 3
மல்லி தூள் - 1
tbl.spoon
கசகசா - 11/2
t.spoon
காய்ந்த மிளகாய் - 6
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 3 பல்
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 4
சீரகம் - 1t.spoon
குடை மிளகாய் - 3/4 கப்
கசூரி மேத்தி - 1/2
t.spoon
பிரவுன் சுகர் -
சிறிது
எண்ணெய் - 2
tbl.spoon
மல்லி இழை
- சிறிது
செய்முறை:
முதலில் வெங்காயம்,காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, மல்லி தூள், பட்டை மற்றும் லவங்கம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
தக்காளியை தனியாக அரைத்து கொள்ளவும். வாணலியில்
எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு, சிறிதளவு சர்க்கரை
சேர்த்து அரைத்த மசாலா விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும், பிறகு பேபி கார்ன், குடைமிளகாய் சேர்த்து
வேக வைக்கவும் அடுத்து தக்காளி விழுதை ஊற்றி உப்பு சேர்த்து நன்கு
கொதிக்க விடவும்.கடைசியாக கசூரி மேத்தி மற்றும் மல்லி இழை சேர்க்கவும்.
இந்த பேபிகார்ன் சப்ஜி சப்பாத்தி,நான்,புல்கா ரொட்டிக்கு
ஏற்ற சுவையான சைட்டிஷ்.