சாம்பார் இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
மசூர் பருப்பு - 1/2 கப்
பரங்கிக்காய் - சிறிய துண்டு
சின்ன வெங்காயம் - 12
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4
t.spoon
பெருங்காயம் - 1/4
t.spoon
புளி - சிறிய உருண்டை
கறிவேப்பிலை -சிறிதளவு
மல்லித்தழை - சிறிதளவு
நெய் - 2
t.spoon
வறுத்து பொடிக்க:
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 1
t.spoon
கடலை பருப்பு - 1
t.spoon
சீரகம் - 1/2
t.spoon
வெந்தயம் - 1/2
t.spoon
தேங்காய் - 1
t.spoon
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 3
t.spoon
தாளிக்க:
கடுகு - 1/2
t.spoon
உளுத்தம் பருப்பு - 1
t.spoon
எண்ணெய் - 1
tbl.spoon
செய்முறை:
பருப்பு,மஞ்சள் தூள் மற்றும்
பரங்கிக்காய் சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி
தாளிக்க வேண்டிய பொருட்களை தாளித்து அதனுடன் வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
பிறகு புளி தண்ணீரை ஊற்றி கறிவேப்பிலை,பெருங்காயம் சேர்த்து பச்சை
வாசனை போக கொதிக்க விட்டு , வேக
வைத்த பருப்பு , அரைத்த
பொடி , தேவையான அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து ஐந்து
நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விடவும்.
இட்லி மாவை கொண்டு சிறு ,சிறு இட்லிகளாக ஊற்றிக்
கொள்ளவும்.
பரிமாறும் கிண்ணங்களில்
இட்லிகளை போட்டு அதன் மேல் சாம்பாரை ஊற்றி , மல்லித்தழை தூவி , நெய்விட்டுப் பரிமாறுங்கள்.
No comments:
Post a Comment